Sunday, November 28, 2010

Am I a fool ?

துறவி ஒருவர், நள்ளிரவில் தனது ஆசிரமத்துக்கு வந்து தங்குவதற்கு இடம் கேட்ட 50 வயது வழிப் போக்கருக்கு, தட்டுத் தடுமாறி சமைத்துப் போட்டார். படுப்பதற்கு பாயும் தலையணையும் கொடுத்தார். விடிந்ததும் கிளம்ப முற்பட்ட வழிப்போக்கரிடம், ''நீ யாரப்பா?'' என்று கேட்டார். துறவியிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன், ''ஐயா, நான் திருடன். கொலை காரனும்கூட! காவலர்கள் துரத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிக்கவே உங்களிடம் அடைக்கலம் கேட்டு வந்தேன்!'' என்று பணிவுடன் கூறினான் வழிப்போக்கன்.

துறவி அதிர்ந்தார். 'இந்த பாவியை ஆசிரமத்தில் தங்க வைத்து, உணவிட்டு பெரும் பாவத்தைத் தேடிக் கொண்டோமே' என்று வருந்தினார். அன்று இரவு துறவி யின் கனவில் தோன்றிய கடவுள், ''முட்டாளே... திருடனுக்கு ஓர் இரவு தங்குவதற்கு இடமும் உணவும் கொடுத்த பாவத்தை எங்கு போய் கழுவுவது என்று வருந்து கிறாயே... ஐம்பது வருடமாக இந்த பூமியில் அவனுக்கு இருக்க இடம் கொடுத்து, உண்ண உணவும் அளிக்கிறேனே... அந்த பாவத்தை நான் எங்கே போய்க் கழுவுவது?'' என்று கேட்டாராம்!

No comments:

Post a Comment